தமிழ்

கம்ப இராமாயணம்: வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தமிழில் இராமாவதாரம் என்னும் காப்பியமாக்கியவர் கம்பர். இதனால் இவர் ஆக்கிய இந் நூல் கம்ப இராமாயணம் என வழங்கப்படுகின்றது. காப்பிய வளம், கற்பனைச் செறிவு, பாத்திரப் படைப்பு, இலக்கிய நயம் முதலியவற்றால் தமிழ் இலக்கியங்களில் தலையாய இடம் பெற்றுள்ளது கம்ப இராமாயணமே என்பர். மேற்படி அம்சங்களில் மூல நூலையே விஞ்சுமளவுக்குக் கம்பரின் படைப்பு அமைந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.

 

மகாபாரதம்: மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார். 

 

சிலப்பதிகாரம்: தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் செங்குட்டுவனின் சகோதரர் இளங்கோவடிகள் ஆவார். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள். இவர் கி. பி 2 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்ற ஆதாரமாக செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயில் எடுத்து விழாக் கொண்டாடிய போது இலங்கை மன்னன் கயவாகு உடனிருந்தான் என்பதை இளங்கோவடிகளே கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும் நன்னாள் செய்த நாளினி வேள்வியும் (வரந்தரு காதை ) எனக் கூறியுள்ளார்.

கயவாகு மன்னனது ஆட்சி கி.பி 2-ஆம் நூற்றாண்டு என இலங்கை சரித்திரமாகிய மகாவம்சம் கூறுகிறது. இளங்கோவடிகள் தன் பிறந்த காலத்திற்கு காரணம் கூறியவாறு இயற்றிய காப்பியத்திற்கும் காரணம் வைத்துள்ளார். சிலம்பு+ அதிகாரம்= சிலப்பதிகாரம். கதையில் வரும் திருப்ப நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சிலம்பே (கண்ணகி, பாண்டிமாதேவி ஆகியோரின் கால் சிலம்புகள்) இக் காப்பியத்தில் சிலம்பு காரணமாக இருப்பதால் சிலப்பதிகாரம் எனப்பட்டது. சிலப்பதிகாரத்தின் வேறு பெயர்களாக முத்தமிழ் காப்பியம் (இயல், இசை, நாடகம்) என்னும் முத்தமிழும் விரவிப் பெற்றதால், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் (பாடல்கள் இடையிடையே உரைநடையும் வருவதால்), இயல், இசை, நாடகப் பொருட் தொடர்நிலைச் செய்யுள் (இசை, நாடக வெண்பாக்கள் நிறைந்துவருவதால்), குடிமக்கள் காப்பியம் (சிலப்பதிகாரத் தலைவன் சாதாரண வணிகன் என்பதால்) என்றும் அழைப்பர்.

 

மணிமேகலை: மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள்.

 

திருக்குறள்: திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.

 

தமிழ் இணையக் கல்விக்கழகம்: உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.ப.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

 

தமிழ் செய்தித்தாள்கள்:   தமிழில் உள்ள  அனைத்து வகையான  செய்தித்தாள்கள் இந்த இணையதளத்தில் பார்லாம். தினத்தந்தி,தினகரன்,தினமலர்,தினச்சுடர்,தினமணி, மலை மலர்,தினபூமி,தமிழ் முரசு, தீக்கதிர்

 

Tamilcube.com :  Welcome to Tamilcube.com, your one-stop portal for popular modern dictionaries and authentic online resources for rich languages of India, Asia and beyond. We offer you comprehensive free dictionaries and language resources in many Indian and Asian languages including Tamil, Telugu, Malayalam, Hindi, Sanskrit and Marathi. We are Singapore’s leading translation service provider with more than 15 years of experience. We provide you high quality translation service and also publish text books and guides.